தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களால் 26.08.2021 அன்று உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது தமிழகத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது இதற்கான G.O.அரசாணைர(நிலை) எண் 228, உயர்கல்வி துறை, நாள் 19.11.2021 வெளியிடப்பட்டதை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஏரியூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலமாக 07.07.2022 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி(இ.அ.ப) குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் . இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வெங்கடேஸ்வரன் , பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு ஜி.கே.மணி, புதிய கல்லூரி முதல்வர் க.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் , பி.ஏ. ஆங்கிலம் , பி.எஸ்சி. கணிதம் , பி.எஸ்சி. கணினி அறிவியல் , பி.காம் , ஆகிய 5 பாடப்பிரிவுகள் 2022-2023 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான முதல் கட்ட மாணவ சேர்க்கையானது இக்கல்லூரியில் நடத்தப்பட்டது இதில் 185 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் .